search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தர்வக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பணி"

    கந்தர்வக்கோட்டை வர்த்தக சங்க கூட்டம் சங்க தலைவர் பழக்கடை மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. #busstation

    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை வர்த்தக சங்க கூட்டம் சங்க தலைவர் பழக்கடை மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் சந்தா மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் கந்தர்வக்கோட்டை பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடை வீதிகளில் பட்டாசு வெடிப்பதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கந்தர்வக்கோட்டை முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும், சங்க கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் தலைவர் சேட்டு, பொருளாளர் செந்தில், அட்மா தமிழழகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள கலந்து கொண்டனர். #busstation

    ×